Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விமான நிலையத்தில் தடைசெய்யப்பட்ட சிகரட்டுடன் ஒருவர் கைது

In இலங்கை
Updated: 09:11 GMT, Jan 19, 2018 | Published: 09:11 GMT, Jan 19, 2018 |
0 Comments
1076
This post was written by : Sujitharan

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட 22 பண்டல் சிக்கிரட் எடுத்து வந்த ஒருவரை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தல் வைத்து இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய பொலிசார் தெரிவித்தனர்

குறித்த நபர் மீது சந்தேகம் கொண்ட விமானநிலைய சுங்கப் பிரிவினர் அவரின் பைகளை சோதனையிட்ட போது குறித்த சிகிரட்டுக்களை மீட்டதுடன் அவரை கைது செய்து அதற்கான தண்டம் பணத்தை பெற்ற பின்னர் அவரை விடுவித்துள்ளனர்.

அதேவேளை இலங்கை ரூபாய் 3 இலச்சம் பணத்தை எமது நாட்டில் இருந்து சிங்கபூருக்கு எடுத்துச் சென்ற இரு இலங்கையர்களை நேற்று முன்தினம் இரவு விமான நிலைத்தில் கைது செய்யப்பட்டததுடன் பணத்தை பறிமுதல் செய்த பின்னர் அவர்களை சிங்கப்பூருக்கு பயணிக்க அனுமதித்தனர்.

இலங்கை நாணயம் 20 ஆயிரம் ரூபாவுக்கு மேல் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்ற சட்டத்தின் அடிப்படையில் இருவரும் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg