Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். பல்கலைக்கழக பெரும்பான்மையின மாணவர்களிடையே மோதல்!

In இலங்கை
Updated: 10:16 GMT, Jan 19, 2018 | Published: 09:21 GMT, Jan 19, 2018 |
0 Comments
1128
This post was written by : Sujitharan

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெரும்பான்மையின மாணவர்களிடையே மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இரவு இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பகிடிவதையின் போது முதலாம் வருட மாணவன் ஒருவரின் தலைமுடியை சிரேஸ்ட மாணவர்கள் கத்தரித்தமையால் ஏற்பட்ட முரண்பாடே இந்த மோதலுக்கு காரணம் என அறிய முடிகிறது.

பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து யாழ். பரமேஸ்வரா சந்திக்கு வந்த மாணவர்கள் அங்கும்  கற்களை வீசி தாக்கிக்கொண்டுள்ளனர். இதனால் அவ்வீதியால் சென்றவர்கள் பீதியுடன் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து சமரச முயற்சியில் ஈடுபட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg