Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிகாரத்தில் உள்ளவர்களும் தேர்தல் சட்டத்தை மீறக்கூடாது: மஹிந்த தேசப்பிரிய

In இலங்கை
Updated: 09:21 GMT, Jan 19, 2018 | Published: 09:21 GMT, Jan 19, 2018 |
0 Comments
1143
This post was written by : Varshini

அதிகாரத்தில் உள்ளவர்களும் தேர்தல் சட்டத்தை மீறாது அதனை மதித்து செயற்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக் கொண்டுள்ளார்.

தேர்தல் திணைக்களத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்-

”தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகிறது. வாக்காளர்கள் தமது உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அவர்கள் தவறாது வாக்களிக்க வேண்டும்.

தேர்தல்களில் ஊழல் இடம்பெற்று வருகின்றது. இதனை நாம் மறுக்கவில்லை. மக்களுக்கு அழுத்தம் கொடுத்து எவரும் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டாம்.

மக்களை சிந்தித்து செயற்படுத்தும் கால எல்லையினை வழங்க வேண்டும். அதற்கு அரசியல் கட்சிகளும்; அதிகாரத்தில் உள்ளவர்களும் இடமளிக்க வேண்டும். அதுவே ஜனநாயக தேர்தல் சுதந்திரம் என கருதுகின்றோம்’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg