Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மூடப்பட்ட பாதையில் சமூக சீரழிவு சம்பவங்கள்! – மக்கள் விசனம்

In இலங்கை
Updated: 10:25 GMT, Jan 19, 2018 | Published: 09:44 GMT, Jan 19, 2018 |
0 Comments
1075
This post was written by : Sujitharan

வவுனியா பழைய பேரூந்து நிலைய கடைத் தொகுதிகளுக்கு செல்லும் பாதைகளில் ஒன்று உடையும் நிலையில் உள்ளதால் நகர சபையினால் கடந்த சில மாதங்களாக குறித்த பாதை மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பாதையில் புகைத்தல், மது பாவனை போன்ற பல சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் இப்பாதையே நகரசபையின் மலசலகூட தொகுதிக்கு செல்லும் இலகுவான வழியாகும். தற்போது இப்பாதை மூடப்பட்டமையால் வர்த்தகர்களும் பிரயாணிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

மேலும் இப்பாதை மூடப்பட்டமையால் மாற்று பாதையினூடாகவே மேல் மாடியில் உள்ள வர்த்தக தொகுதிக்கு மக்கள் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பல வர்த்தக நிலையங்களில் வியாபார நடவடிக்கை பாதிப்படைந்துள்ளதுடன் சில வர்த்தகர்கள் தமது தொழிலை இழக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

பழைய பேரூந்து நிலையத்தில் தற்போது பேரூந்து சேவைகள் இடம்பெறாமையினால் அதிகளவான வர்த்தகர்களின் வியாபாரம் பாதிப்படைந்து வாழ்வாதாரம் தொடர்பில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையினை தவிர்ப்பதற்கு வவுனியா நகரசபை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையின் செயலாளரிடம் கேட்ட போது, இது தொடர்பாக கட்டடங்கள் திணைக்களமே நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டார். இதுதொடர்பாக அறிவித்தல் பல மாதங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் கட்டடங்கள் திணைக்களத்தின் பொறியியலாளர் குறித்த பாதையை பார்வையிட தாமதிப்பதாலேயே புனரமைப்பு பணிகளை செய்ய முடியாதுள்ளதாக நகரசபை செயலாளர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg