Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பழி தீர்த்தது இங்கிலாந்து! 2வது ஒருநாள் போட்டியிலும் அவுஸ்ரேலியா தோல்வி

In கிாிக்கட்
Updated: 11:00 GMT, Jan 19, 2018 | Published: 11:00 GMT, Jan 19, 2018 |
0 Comments
1465
This post was written by : Sujitharan

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும், இங்கிலாந்து அணி 4 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்ரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று, பிரிஸ்பேர்னில் நடைபெற்றது.

இதில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் ஆரோன் ஃபிஞ்ச் சதம் கடந்து 107 ஓட்டங்களையும், மிட்சல் மார்ஷ் 36 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 35 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில், ஆதில் ராஷிட் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து 271 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 44.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக Jonny Bairstow 60 ஓட்டங்களையும், Alex Hales 57 ஓட்டங்களையும், ஜோ ரூட் ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஆஷஸ் தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி, ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg