Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொத்துக்குவிப்பு வழக்கு – தினகரனின் சகோதரியை கைதுசெய்யுமாறு உத்தரவு!

In இந்தியா
Updated: 13:32 GMT, Jan 19, 2018 | Published: 12:08 GMT, Jan 19, 2018 |
0 Comments
1097
This post was written by : Kemasiya
10-dinakaran1200

சொத்துகுவிப்பு வழக்கில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரனின் சகோதரியான  ஸ்ரீதளதேவி மற்றும் அவரது கணவன் பாஸ்கரன் ஆகியோரை கைதுசெய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை சி.பி.ஐ.  நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது, அளவுக்கதிகமாக சொத்துக்கள் குவிக்கப்பட்டிருந்தமை தொடர்பாக ஸ்ரீதளதேவி மற்றும் அவரது கணவனுக்கு எதிராக சீ.பி.ஐ.நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருந்த நிலையில், சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும், இத்தீர்ப்பை எதிர்த்து இவர்கள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தனர்.

குறித்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவர்களது தண்டனையை உறுதி செய்ததோடு, இருவரையும் சீ.பி.ஐ. நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. எனினும், அவர்கள் ஆஜராகாததைத் தொடர்ந்து இன்று பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg