Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் அறிமுகம் நாளை!

In இலங்கை
Updated: 12:09 GMT, Jan 19, 2018 | Published: 12:09 GMT, Jan 19, 2018 |
0 Comments
1058
This post was written by : Anojkiyan

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் அறிமுகமும், முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டமும் நாளை (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சி பொது சந்தை வளாகத்தில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வின் போது, கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளனர். இதனைதொடர்ந்து, தேர்தல் பிரச்சார கூட்டம் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.

குறித்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழர்விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் க.சுரேஸ் பிரேமச்சந்திரன், பா ம உ சிவசக்தி ஆனந்தன், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் கட்சி உறுப்பினர் ப.செல்வகுமார், ஜனநாயக தமிழரசு கட்சியின் அமைப்பாளர் வி எஸ் சிவகரன், ஈஆராஸ் அமைப்பின் உறுப்பினர் ஜே.துஸ்யந்தன், கரைச்சி பிரதேச சபை வேட்பாளர் பொன்.காந்தன் ஆகியயோர் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடதக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg