Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உச்ச நீதிமன்ற தீர்ப்பு: நியாயத்தை வெளிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையென்கிறார் தினேஸ்!

In இலங்கை
Updated: 12:16 GMT, Jan 19, 2018 | Published: 12:16 GMT, Jan 19, 2018 |
0 Comments
1173
This post was written by : Varshini

மஹரகம நகர சபையில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்மூலம், தமது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தவும் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன சார்பில் மஹரகம நகர சபையில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை நிராகரிப்பதாக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் விடுத்த அறிவிப்பில் எவ்வித மாற்றமும் இல்லையென உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் தினேஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நிராகரித்துள்ளது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மதிப்பதாக குறிப்பிட்ட தினேஸ், தமது வேட்புமனு தொடர்பில் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் ஏதேனும் தவறு நடந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டார். எனினும், அரசியல் கட்சிகளுக்கோ வேட்பாளர்களுக்கோ தமது தரப்பு நியாயத்தை குறிப்பிடுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையென தெரிவித்தார்.

மஹரகம பிரதேசத்தின் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு தமது கட்சிக்கே உண்டு எனக் குறிப்பிட்ட தினேஸ், இவ்விடயத்தில் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் ஏதேனும் தவறு இடம்பெற்றிருக்கலாமென கருதியே மனுத்தாக்கல் செய்ததாக குறிப்பிட்டார். இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொடர்பில் தமது கட்சியின் உயர்மட்டக் குழு கூடி ஆராயுமென தினேஸ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg