Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நேபாள அரசாங்கம் ஐனாதிபதி மைத்திரிக்கு நன்றி!

In இலங்கை
Updated: 13:11 GMT, Jan 19, 2018 | Published: 13:10 GMT, Jan 19, 2018 |
0 Comments
1069
This post was written by : Anojkiyan

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட மோசமான பூமி அதிர்ச்சியின் போது இலங்கை இராணுவத்தினரால் வழங்கப்பட்ட துரித உதவிகள் மிக உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டமைக்கு நேபாள அரசாங்கத்தின் சார்பில் நேபாள இராணுவ பதவிநிலைப் பிரதானி ஜெனரல் ராஜோந்திர சேத்திரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையே நீண்டகாலமாக நிலவிவரும் சமய, கலாச்சார மற்றும் சமூக தொடர்புகளை இதன்போது நினைவுகூர்ந்த ஐனாதிபதி, எதிர்காலத்தில் அந்த தொடர்புகளை மேலும் வலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இருநாட்டு இராணுவத்தினரிடையே பயிற்சி மற்றும் தொழில்நுட்ப அறிவினை பரிமாற்றிக்கொள்ளும் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தினையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

விஷேடமாக பாரிய அனர்த்த நிலைமைகளின் போது போதைபொருள் ஒழிப்பு நடவடிக்கைளிலும் அது மிகுந்த முக்கியத்துவம் உடையதாக காணப்படுவதாகவும் தெரிவித்தார். இதன்போது சந்திப்பினை நினைவுகூரும் வகையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg