Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய ஒருமைப்பாட்டிற்கு அத்திவாரமிடும் ‘சகோதர பாடசாலை’

In இலங்கை
Updated: 13:03 GMT, Jan 19, 2018 | Published: 13:03 GMT, Jan 19, 2018 |
0 Comments
1156
This post was written by : Varshini

சமூகங்களுக்கு இடையே காணப்படும் வேறுபாடுகளை களைந்து தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில், ‘சகோதர பாடசாலை’ என்ற நிகழ்வு கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஒன்பதாவது தடவையாக நடைபெறும் இந்த நிகழ்வு, கடந்த இரு தினங்களாக கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் நாட்டின்  வெவ்வேறு மாகாணங்களில் உள்ள மாணவர்கள் அழைத்து வரப்பட்டு வெவ்வேறான குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு இடையே கருத்துப் பகிர்வு இடம்பெற்று வருகின்றது.

சகல மதங்களையும் சேர்ந்த மாணவர்களும் இன, மத, மொழி பேதங்களை கடந்து தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்வதோடு, பல்வேறு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தமக்கு புதிய அனுபவமாகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் உள்ளதென மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக  வெவ்வேறு மொழிகளில் உள்ள மாணவர்கள் தமது கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே காணப்படுகின்றது. அந்த வகையில், இந்த நிகழ்ச்சித் திட்டமானது மாணவர்களிடையே காணப்படும் வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையை ஏற்படுத்த ஏதுவாக அமைவதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிகழ்வில் பெற்றுக்கொண்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, தத்தமது மாகாணங்களில் உள்ள மாணவர்களுக்கும் இதனை போதிப்பதற்கு வாய்ப்புள்ளதென ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg