Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாதியர்களுக்கு நிரந்தர வீட்டு வசதி: இராதாகிருஷ்ணன் அறிவிப்பு

In இலங்கை
Updated: 14:29 GMT, Jan 19, 2018 | Published: 14:29 GMT, Jan 19, 2018 |
0 Comments
1063
This post was written by : Anojkiyan

தாதியர்களுக்கு நிரந்தரமான வீடுகளை கட்டுவதற்கு காணிகள் பெற்றுக்கொடுக்க, மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நோர்வூட் வெஞ்சர் தோட்டத்தில் (நேற்று) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“7 பேர்ச் காணி சொந்தமாக உரிமையோடு கிடைக்கப்பெற்றுள்ளது. வீடுகள் கிடைக்கப்பெறுகின்றன. எனவே இதெல்லாம் செய்வதற்கான சந்தர்ப்பம் இந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாகவே கிடைக்கப்பெற்றுள்ளது. அதேபோல பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு வைத்தியர்கள், தாதியர்கள் பற்றாக்குறை நிலவுவதனால் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்துள்ளோம். தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடாக பல அபிவிருத்திகளை செய்து வருகின்றது.

ஆகவே இந்த அபிவிருத்தி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென்றால் பிரதேச சபையை நாம் கைப்பற்ற வேண்டும். பிரதேச சபை நாம் கைப்பற்றினால் தான் இந்த சேவைகளை நாம் செய்ய முடியும். பிரதேச சபைகளில் எமது உறுப்பினர்கள் அதிகமாக வந்தால் தான் எமக்கு தேவையானவற்றறை நாமே செய்துக்கொள்ள முடியும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg