Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முறிகள் மோசடி தொடர்பான விசாரணை அறிக்கையில் பல பக்கங்கள் இல்லை: கீர்த்தி தென்னக்கோன்

In இலங்கை
Updated: 16:19 GMT, Jan 19, 2018 | Published: 16:19 GMT, Jan 19, 2018 |
0 Comments
1171
This post was written by : Anojkiyan

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறிகள் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என காஃபி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

நடப்பு அரசியல் களத்தில் முறிகள் மோசடி விவகாரம் தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், குறித்த விடயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஒரு பகுதி மாத்திரமே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. சில பகுதிகளை பகிரங்கப்படுத்த வேண்டாம் என ஆணைக்குழுவினால் சிபாரிசு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தவிர, மேலும் பல பக்கங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது.

நூற்றுக்கணக்கான பக்கங்கள் அல்ல. ஆயிரக்கணக்கான பக்கங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான பக்கங்களை பகிரங்கப்படுத்தாமல் இந்த முறிகள் மோசடியுடன் தொடர்புபட்ட உண்மையான நபர்களை மக்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியாது.

அத்துடன், 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இது தொடர்பிலான விவாதம் இடம்பெறவுள்ளது. இந்த ஆணைக்குழுவின் பாகங்களை மறைப்பதற்கு யாராவது முயற்சி செய்தால் இதன் மூலம் திருடர்களைப் பாதுகாப்பதற்கு முயற்சிக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg