Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

In இலங்கை
Updated: 16:44 GMT, Jan 19, 2018 | Published: 16:44 GMT, Jan 19, 2018 |
0 Comments
1103
This post was written by : Anojkiyan

கிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

அக்கராயன் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேரூந்தொன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளடன், உழவு இயந்திரத்தின் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிளிநொச்சி – செல்வநகர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் என தெரிவித்துள்ள பொலிஸார், இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg