Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பூமியை நெருங்கும் விண்கல்: நாசா விஞ்ஞானிகள் கூரும் தகவல்

In தொழில்நுட்பம்
Published: 17:09 GMT, Jan 19, 2018 |
0 Comments
1082
This post was written by : Anojkiyan
win

மிகப்பெரிய விண்கல் ஒன்று எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி பூமிக்கு அருகாமையில் வரவுள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

2002 யுது129 என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த விண்கல், 1.1 கிலோ மீட்டர் விட்டம் கொண்டது. அதாவது உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் உயரத்தை விடவும் அதிக விட்டம் கொண்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த விண்கல் பூமிக்கு சுமார் 74 இலட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை நெருங்கி வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பெப்ரவரியில் பூமியை நெருங்கி வரும் விண்கல் பூமியைத் தாக்குவதற்கு வாய்ப்பில்லை என்ற போதிலும், இத்தகைய பெரிய விண்கல் பூமியை தாக்கினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுக்கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், அடுத்த 100 ஆண்டுகளுக்கு விண்கற்கள் பூமியைத் தாக்கும் அபாயம் இல்லை என்றும் நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg