Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீதியை நிலைநாட்ட காலதாமதம் – ஐ.நா. அமர்வில் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி

In இலங்கை
Updated: 17:46 GMT, Jan 19, 2018 | Published: 17:43 GMT, Jan 19, 2018 |
0 Comments
1163
This post was written by : Anojkiyan
யுத்த கால வன்முறைகளுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க மற்றும் மனித உரிமையை உறுதிப்படுத்த ஐ.நாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை தாமதித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

643 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் இலங்கை உள்ளிட்ட 90இற்கும் மேற்பட்ட நாடுகளின் மனித உரிமை விவகாரம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது

நீண்டகாலமாக நீதியை எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இலங்கை வழங்கிய வாக்குறுதியால் பாரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது எனவும் நிலைமாறு கால நீதிப்பொறிமுறை தொடர்பில் கடந்த 2015இல் ஐ.நாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் சிறிதளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதும், சிறிதளவு செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டுள்ளதென, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியாவுக்கான பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தை அமைத்தல் போன்ற விடயங்களில் அர்த்தமுள்ள செயற்பாடுகள் இடம்பெறவில்லை
மார்ச்சில் நடைபெறும் ஐ.நா.கூட்டத்தொடரில் இலங்கையும் பங்கேற்கவுள்ள நிலையில், உறுதிமொழிகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நாவின் உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg