Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சர்களின் லாபத்தை நோக்கமாக கொண்டே பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது: தினகரன்

In இந்தியா
Updated: 05:15 GMT, Jan 20, 2018 | Published: 05:15 GMT, Jan 20, 2018 |
0 Comments
1110
This post was written by : Kemasiya

அமைச்சர்களாக இருக்கும் பலர் அரச போக்குவரத்துக்கு அதிபதிகளானதால் தான் பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என, அர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டிவி. டினகரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த தினகரன் மேற்படி தெரிவித்துள்ளார்.

“குறித்த கட்டணத்தை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அமைச்சர்கள் தமது லாபத்தை கருத்தில் கொண்டே இந்த உயர்வு அமுலுக்கு வந்துள்ளது. இந்த கட்டண உயர்வை தமிழக அரசு திருப்பி பெற வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

அரச பேரூந்துகள் நஷ்டத்தில் இயங்குவதாகவும், அதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந் நிலையில் கட்டண அதிகரிப்பை நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தியும் உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் டி.டிவி. தினகரன் மேற்படி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg