Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரட்டை இலைச்சின்னம் எங்கிருக்கிறதோ அங்கு தான் தனது விசுவாசம் என ராஜேந்திர பாலாஜி உறுதி

In இந்தியா
Updated: 05:56 GMT, Jan 20, 2018 | Published: 05:56 GMT, Jan 20, 2018 |
0 Comments
1133
This post was written by : Kemasiya

இரட்டை இலைச்சின்னம் எங்குள்ளதோ அங்கு தான் தனது விசுவாசம் இருக்கும் என அமைச்சர் ராஜேந்திர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை விருந்துநகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற எம்.ஜி.ஆர் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பாலாஜி மேற்படி கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“புரட்சி தலைவி சொன்னார், இரட்டை இலை மற்றும் அ.தி.மு.க கட்சி எங்குள்ளதோ அங்கு தான் நான் இருப்பேன் என்று. அதை தான் நானும் சொல்கிறேன் இரட்டை இலை எங்கிருக்கோ அம்மாவின் ஆத்மா எங்கிறதோ அங்கு தான் நானும் இருப்பேன்.” எனக் கூறியுள்ளார்.

மேலும் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு 4ஆம் திகதி மாலை 5.20 மணிக்கு  முற்றாக செயலிழந்து உயிர்நீத்தவாறு உள்ளார் என்ற செய்தி தனக்கு கிடைத்ததாகவும் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் அம்மாவின் ஆத்மா துணை நிற்க ஆட்சி சிறப்பாக இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg