Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொலம்பியாவில் குடியேறும் வெனிசுவேலா பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

In உலகம்
Updated: 05:58 GMT, Jan 20, 2018 | Published: 05:57 GMT, Jan 20, 2018 |
0 Comments
1142
This post was written by : Suganthini

வெனிசுவேலாவில் நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக, கொலம்பியாவில் குடியேறியுள்ள வெனிசுவேலா பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, கொலம்பிய குடிபெயர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொலம்பியாவில் குடியேறியுள்ள வெனிசுவேலா பிரஜைகளின் எண்ணிக்கை கடந்த 6 மாதங்களில் மாத்திரம் 62 சதவீதமாக அதிகரித்துக் காணப்படுவதாகவும், நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது கொலம்பியாவில் வெனிசுவேலாவைச் சேர்ந்த 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இவர்களில் பெருமளவானோர், சட்டவிரோதமாகத் தங்கியுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, வெனிசுவேலாவைச் சேர்ந்த ஒரு மில்லியன் பேர், கொலம்பியாவில் குடிவரவு அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்துள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொலம்பியாவில் பயணம் செய்யும் வெனிசுவேலா பிரஜைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg