Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அநாதையாக மீட்கப்பட்ட ரயில் நிலையத்திற்கு அதிகாரியானார் கீதா

In இந்தியா
Updated: 06:42 GMT, Jan 20, 2018 | Published: 06:42 GMT, Jan 20, 2018 |
0 Comments
1606
This post was written by : Kemasiya

கேரளா மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் பசியில் மயங்கி வீழ்ந்து கிடந்த நிலையில் அருட்சகோதரிகளால் குழந்தையாக மீட்கப்பட்ட கீதா என்ற பெண் தற்போது அதே ரயில் நிலையத்தில் ரயில்வே அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள சம்பவம் அனைவருரையும் நெகிழ வைத்துள்ளது.

தற்போது தனது பெற்றோரை தேடும் குறித்த பெண்,  நிச்சயம் அவர்களை கண்டுபிடித்து விடுவேன் என்னும் நம்பிக்கை உள்ளதாக நேற்று (வெள்ளிக்கிழமை) காலை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

1998ஆம் ஆண்டு 3ஆம் திகதி குறித்த பெண்ணை 3வயது சிறுமியாக ரயில்வே நிலையத்தில் இருந்து அருட்சகோதரிகள் தத்தெடுத்துள்ளனர்.

இந்நிலையில் அருட்சகோதரிகளின் ‘ஆசா தீப கிறிஸ்வத கன்னியாஸ்திரிகள்’ என்ற நிர்வாகம் கீதாவை கல்வி கற்பித்தது.

பாடசாலைக்காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய கீதா, கூடைப்பந்திலும் சிறந்த வீராங்கனையாக பதக்கங்களை சுவீகரித்தார்.

மேற்படிப்பை கோழிக்கோட்டில் உள்ள கல்லூரியில் கற்ற கீதா, தனது 22 வயதில் ரயில்வே திணைக்கள பரீட்சையை எழுதி சித்திபெற்று ரயில்வே அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று குறித்த ரயில் நிலையத்தில் தான் அநாதையாக வீழ்ந்து கிடந்த இடத்தை பார்த்து கண்ணீர் விட்ட கீதா அந்த பாதையில் மிடுக்கு நடையுடன் சென்றபோது செய்தியாளர்கள் அவரை நேர்காணல் செய்துள்ளனர்.

“கீதாவை ரயில் நிலையத்தில் இருத்தி விட்டு அவளின் தந்தை தொழிலுக்கு செல்வார். அவ்வாறு ஒரு நாள் சென்ற போதே கீதா பசியினால் மயங்கி கிடந்தாள்.

அவளை பார்த்து நாம் அவளை எழுப்பிய போது அவளின் தந்தை வந்துவிட்டார்.

அவர் இவள் என் மகள் எனக் கூறினார். அப்போது, உங்களுக்கு வசிக்க ஒரு இடம் கிடைக்கும் வரை இவளை நாம் வளர்க்கிறோம் எனக் கூறி தத்தெடுத்தோம்.

எமது இல்லத்திற்கு கீதாவை அழைத்துவந்து மறு நான் அவளின் தந்தை வந்து பார்த்தார். அதன் பின்னர் அவர் இங்கு வரவே இல்லை.” என கீதாவை வளர்த்த அருட்சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கீதா கூடைப்பந்து வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும். அதற்கு முன்னர் தனது தாய் தந்தையை தேடுவதாகவும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg