Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அணியின் சாதகமான செயற்திறன் மட்டத்தையும் கவனிப்பது அவசியம்: தோனி

In கிாிக்கட்
Updated: 06:15 GMT, Jan 20, 2018 | Published: 06:03 GMT, Jan 20, 2018 |
0 Comments
1211
This post was written by : Elakkiya

தென் ஆபிரிக்க அணியுடனாக டெஸ்ட் தொடரின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திரசிங் தோனி, அணியின் சாதகமான செயற்திறன் நிலைப்பாட்டையும் கவனிப்பது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ” இரண்டு டெஸ்ட் போட்டியிலும் 20 விக்கெட்களை வீழ்த்திய அணி தம்மை வெற்றிபெறுவதற்கான வாய்ப்பை வழங்கியது. டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறுவதற்கு 20 விக்கெட்கள் தேவை. இதனை நாம் எடுத்தோம். இது மிகப்பெரிய சாதகமான விடயம். 20 விக்கெட்களை கைப்பற்றாவிடில் டெஸ்ட் போட்டியில் வெல்ல முடியாது. எனவே போட்டியில் வெற்றிபெறும் நிலையிலேயே நாம் இருந்தோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தென் ஆபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் முதலிரு போட்டியிலும் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

மூன்றாவது போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg