Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் தேர்தல் பிரசார சுவரொட்டிகளுடன் மூவர் கைது

In இலங்கை
Updated: 06:36 GMT, Jan 20, 2018 | Published: 06:34 GMT, Jan 20, 2018 |
0 Comments
1115
This post was written by : Risha

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு சுவரொட்டிகளை ஒட்டிய மூவரை வவுனியா பண்டாரிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசார சுவரொட்டிகளுடன் குறித்த மூவரும் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரிக்குளம் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாக பண்டாரிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த மூவரும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg