Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீர்வின்றேல் மன்னார் வைத்தியசாலையை மூடுவதே வழி: அபிவிருத்திக் குழு

In இலங்கை
Updated: 07:02 GMT, Jan 20, 2018 | Published: 07:02 GMT, Jan 20, 2018 |
0 Comments
1276
This post was written by : Risha

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள வைத்திய நிபுணர்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு எட்டப்படாவிடின், வைத்தியசாலையை மூட வேண்டிய துர்ப்பாக்கி நிலை ஏற்படலாம் என வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளர் வி.எஸ் சிவகரன் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்திக் குழு செயலாளரினால், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது, ”மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையினால் நிர்வாகம் நிலையிழந்து போவதாக ஏற்கனவே, தங்களுக்கு பலமுறை கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் தெரிவித்திருந்ததுடன், ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதியிருந்தோம்.

ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், வீதியில் குழந்தை பிறப்பு நிகழும் விசித்திரத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். மனித வாழ்வின் அத்தியாவசிய தேவையாகிய மருத்துவ சேவையைக்கூட அந்த நாட்டு மக்களுக்கு வழங்க முடியாவிட்டால் அந்த ஆட்சி நடப்பதில் என்ன பயன்?

மனிதாபிமானத்திலும் சிங்கள தேசம், தமிழர் தேசம் என கடந்த காலத்தில் பார்த்து பழகியதையே இன்றும் தொடர் கதையாக்கியுள்ளீர்கள். இவ்வாறிருந்தால் எப்படி நல்லிணக்கம் ஏற்படும்.

கர்ப்பிணித் தாய்மார் கடந்த ஒரு வார காலமான வீதியில் இறங்கி போராடியும் எந்தவித தீர்வும் கிடைக்கிவில்லை. எவ்வித அதிகாரமும் இன்றி பெயரளவிலேயே மாகாண சுகாதார அமைச்சு இயங்குகின்றது.

மன்னார் மாவட்டத்தில் வைத்தியசாலையில் உள்ள பல்வேறு விதமான குறைபாடுகளை ஆராய்ந்து உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லாவிடின் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவே வைத்தியசாலையை மூட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம் என மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg