Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்கொரியாவுக்கான வடகொரியக் குழுவினரின் விஜயம் தற்காலிகமாக ரத்து!

In உலகம்
Updated: 07:03 GMT, Jan 20, 2018 | Published: 07:03 GMT, Jan 20, 2018 |
0 Comments
1112
This post was written by : Suganthini

குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடர்பாக ஒத்திகை பார்ப்பதற்காக, வடகொரியாவின் சார்பில் 7 பேரைக் கொண்ட கலைக்குழுவொன்று தென்கொரியாவுக்கு இன்று (சனிக்கிழமை) விஜயம் செய்யவிருந்தபோதும், அக்குழுவினரின் விஜயம் திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

வடகொரியா சார்பிலான கலைக் குழுவினரின் விஜயம் திடீரென ரத்துச் செய்யப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும், வடகொரியா சார்பிலான குழுவினரின் விஜயம் நிரந்தரமாக ரத்துச் செய்யப்படவில்லை. அக்குழுவினரின் விஜயம் தற்காலிகமாகவே ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், தென்கொரிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவ்வமைச்சு மேலும் தெரிவிக்கையில், ‘வடகொரியா தமது குழுவை முன்கூட்டி அனுப்பாமைக்கான காரணத்தை இதுவரையில் கூறவில்லை.

எவ்வாறாயினும், குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடர்பான மேலதிக கலந்துரையாடல், வடகொரியா மற்றும் தென்கொரிய அதிகாரிகளுக்கிடையில் தொலைபேசி வாயிலாக அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இதன்போது, வடகொரியா சார்பிலான குழுவினரின் விஜயம் ரத்தானமை தொடர்பிலும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளது.

தென்கொரியாவின் பயோங்ஸாங் மாவட்டத்தில் எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இரு கொரியாக்களுக்குமிடையில் ஒலிம்பிக் போட்டி தொடர்பாக 3 கட்டங்களாக கலந்துரையாடல்கள் இந்த மாதம் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், ஒலிம்பிக் போட்டி தொடர்பாக ஒத்திகை பார்ப்பதற்காக, வடகொரியாவின் சார்பில் கலைக்குழுவினரை அனுப்புதற்கு வடகொரியா கடந்த கலந்துரையாடலில் தெரிவித்திருந்த நிலையில், அக்குழுவினர் இன்று தென்கொரியாவுக்கு விஜயம் செய்யவிருந்தனர். இருப்பினும், எதிர்பாராத விதமாக வடகொரியா சார்பிலான கலைக்குழுவினரின் விஜயம் ரத்தாகியுள்ளது.

இதற்கிடையில், வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைகள் காரணமாக வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்குமிடையில் இதுவரைகாலமும் காணப்பட்டுவந்த முறுகல் நிலைமை, குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடர்பாக இரு கொரியாக்களுக்குமிடையில் நடைபெற்றுவரும் கலந்துரையாடல் மூலம் சற்றுத் தணிந்துள்ளமை அவதானிக்கத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg