Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை- சீனா இடையே மற்றுமொரு புதிய ஒப்பந்தம்!

In இலங்கை
Updated: 07:38 GMT, Jan 20, 2018 | Published: 07:38 GMT, Jan 20, 2018 |
0 Comments
1158
This post was written by : Risha

சீமைக்கிழுவை (கிளிரிசீடியா) மரத்தை எரிபொருளாகப் பயன்படுத்தி, பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டம் ஒன்றை இலங்கையுடன் இணைந்து சீனா மேற்கொள்ளவுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று (வெள்ளிக்கிழமை) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மொனராகல மாவட்டத்தில், 70 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் இந்த மின்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயனடையவுள்ளனர். இத்திட்டத்திற்கென ஆண்டுக்கு 3.2 மில்லியன் டொலருக்கு சீமைக்கிழுவை மரங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

வேலிகள் அமைக்கவும், கால்நடைத் தீவனமாகவும் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த கிளிறிசிடியா மரம் தற்போது மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படவுள்ளதால் கிராம மக்களுக்கு அதிக வருவாயை ஈட்டிக் கொடுக்கும் பயிராக இது உருமாறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg