Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னேற்றம்: பிரான்ஸ், ஜேர்மனிக்கு ஒத்துழைக்க வலியுறுத்து

In ஐரோப்பா
Updated: 07:30 GMT, Jan 20, 2018 | Published: 07:30 GMT, Jan 20, 2018 |
0 Comments
1120
This post was written by : Suganthini

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்காக, பிரான்ஸும் ஜேர்மனியும் ஒன்றாக இணைந்து ஒத்துழைக்க வேண்டுமென, ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் சிக்மர் கப்ரியல் வலியுறுத்தியுள்ளார்.

ஏ.ஃஎப்.பி. ஊடகசேவைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பிரான்ஸும் ஜேர்மனியும் எதிரிகளாகக் காணப்படும்போதிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னேற்றத்துக்கும் அதன் செயற்பாடுகளுக்கும் பிரான்ஸும் ஜேர்மனியும் ஒன்றாக இணைந்து  ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும்’ என்றார்.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னேற்றத்துக்கான கூட்டுப் பொறுப்பு இந்த இரு நாடுகளுக்கும் உள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஜேர்மனியில் புதிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில், அதிபர் அங்கேலா மெர்கலுடன் புதிய கூட்டணியை உருவாக்கவும் அவர் தனது சமூக ஜனநாயகக் கட்சிக்கு வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg