Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னையை வீழ்த்தி நோர்த் ஈஸ்ட் வெற்றியை பதிவு செய்தது

In உதைப்பந்தாட்டம்
Updated: 08:49 GMT, Jan 20, 2018 | Published: 08:48 GMT, Jan 20, 2018 |
0 Comments
1092
This post was written by : Elakkiya

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய போட்டியில் சென்னையின் எவ்.சி. அணியை எதிர்கொண்ட நோர்த் ஈஸ்ட் யுனைட்டட் 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

கவுதாத்தியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், முதல்பாதி ஆட்டத்தின் 42 ஆவது நிமிடத்தில் நோர்த் ஈஸ்ட் யுனைட்டட் அணி சார்பில் கோல் அடிக்கப்பட்ட போதிலும் முதல் பாதி ஆட்டத்தில் சென்னை அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை.

இதன்காரணமாக முதல்பாதி ஆட்டத்தில் 1:0 என்ற கோல் அடிப்படையில் நோர்த் ஈஸ்ட் யுனைட்டட் அணியே முன்னிலை பெற்றிருந்தது.

தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்திலும் 46 மற்றும் 68 ஆவது நிமிடத்தில் நோர்த் ஈஸ்ட் யுனைட்டட் அணி கோல் அடிக்க ஆறுதல் கோலாக 79 ஆவது நிமிடத்தில் சென்னை அணி கோல் அடித்தது. நிறைவில் 3:1 என்ற கோல் கணக்கில் நோர்த் ஈஸ்ட் யுனைட்டட் வெற்றியை பதிவு செய்தது.

இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 20 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் நோர்த் ஈஸ்ட் யுனைட்டட் அணி 10 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும் நீடிக்கின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg