Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேரூந்துகளின் கட்டணஉயர்வை அரசு மீளப்பெற வேண்டும்: ஸ்டாலின்

In இந்தியா
Updated: 08:37 GMT, Jan 20, 2018 | Published: 08:37 GMT, Jan 20, 2018 |
0 Comments
1187
This post was written by : Kemasiya

பேரூந்துகளின் கட்டணஉயர்வை தமிழக அரசு மீளப்பெற வேண்டும் என, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இத தொடர்பில் மேலும் கூறிய அவர்,   “அரசு தனது லாபத்தை கருத்தில் கொண்டே பேரூந்து கட்டணங்களை உயர்த்தியுள்ளது .

அரச பேரூந்துகள் தற்போது ஆட்சியில் உள்ள அமைச்சர்களின் கைகளில் உள்ளதால் மக்களை குறித்து சிந்திக்காமல் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர் .

உடனடியாக குறித்த கட்டண உயர்வை மீளப்பெறுவதே அரசுக்கு நல்லது” என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் அரச பேரூந்துகளிற்கு நேற்று கட்டணம் அதிகரிக்கப்பட்டு நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg