Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் தெரேசா மே – ஜனாதிபதி ட்ரம்ப் சந்திப்பு!

In
Updated: 08:26 GMT, Jan 20, 2018 | Published: 08:26 GMT, Jan 20, 2018 |
0 Comments
1168
This post was written by : Suganthini

பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் அடுத்த வாரம் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக, பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சுவீஸின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லும் இவர்கள் இருவரும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும், பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்போது, இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்பார்த்துள்ளதாக, வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

லண்டனில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட அமெரிக்கத் தூதரகத்தை திறந்துவைக்க ட்ரம்ப் மறுப்புத் தெரிவித்திருந்ததையடுத்து, இவர்களுக்கிடையில் சந்திப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg