Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்துப் பயணிகளுக்கு எச்சரிக்கை

In
Updated: 08:47 GMT, Jan 20, 2018 | Published: 08:47 GMT, Jan 20, 2018 |
0 Comments
1216
This post was written by : Suganthini

ஸ்கொட்லாந்தில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பயணிகளுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதால், போக்குவரத்தில் தாமதம் ஏற்படுவதுடன், நடைபாதைகளில் வழுக்குதல், விழுதல் போன்றவை இடம்பெறலாமெனவும் எனவே, பயணிகள்  அவதானத்துடன் நடக்குமாறும், பிரித்தானியாவின் வானிலை நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, கடுமையான பனிப்பொழிவு காரணமாக, ஸ்கொட்லாந்தில் இன்று (சனிக்கிழமை) வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்குமெனவும், வானிலை நிலையம் கூறியுள்ளது.

ஸ்கொட்லாந்தில் கடுமையான பனிப்பொழிவால் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை எம்.74 நெடுஞ்சாலையூடான போக்குவரத்து நிலைமை மிகவும் அபாயகரமாக இருந்ததுடன், சிறிய விபத்துகள் பல சம்பவித்துள்ளன. அத்துடன்,  ஸ்கொட்லாந்திலுள்ள ஏ708 நெடுஞ்சாலை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg