Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னை அணிக்குள் அஸ்வினை உள்வாங்குவோம்: தோனி

In கிாிக்கட்
Updated: 09:17 GMT, Jan 20, 2018 | Published: 09:16 GMT, Jan 20, 2018 |
0 Comments
1160
This post was written by : Elakkiya

ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தின் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வினை அணிக்குள் பெற்றுக் கொள்ள சென்னை சூப்பர்கிங்ஸ் அணி முயற்சிக்கும் என அணித்தலைவர் மகேந்திரசிங் தோனி அறிவுறுத்தியுள்ளார்.

நடப்பாண்டு ஐ.பி.எல் தொடருக்கான ஒவ்வொரு அணியும் வீரர்கள் சிலரை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற அடிப்படையில் மகேந்திரசிங் தோனி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரெய்னா ஆகியோரை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டு அஸ்வினை வெளியேற்றியுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ள வீரர்கள் ஏலத்தில் சென்னை அணி அஸ்வினை அணிக்குள் கொண்டுவரும் என்று தோனி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் கடந்த காலத்திலும் இவ்வாறு செய்துள்ளோம். ஏலத்தில் நிச்சயம் அவருக்காக செயற்படுவோம். அஸ்வின் சென்னை வீரர். நிறைய உள்ளூர் வீரர்கள் சென்னை அணிக்குள் இருக்க வேண்டும். நிச்சயம் அஸ்வினை ஏலத்தில் உள்ளீர்த்துக் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg