Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பூமியின் மீது மோத வரும் விண்கல்!! – பாரிய அழிவு ஏற்படுமா?

In
Updated: 10:59 GMT, Jan 20, 2018 | Published: 09:22 GMT, Jan 20, 2018 |
0 Comments
1448
This post was written by : Puvanes

இதுவரையிலும் பூமியை அண்மித்த விண்கற்களிலேயே மிகப்பெரிய விண்கல் ஒன்று எதிர்வரும் பெப்ரவரி மாதம் பூமியை நெருங்கவுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலினை வெளியிட்டுள்ளனர்.

2002 AJ129 எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் மணிக்கு சுமார் 67000 கிலோமீற்றர்கள் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அளவில் மகப்பெரியதாக இருக்கக்கூடிய இந்த விண்கல் பூமியில் மோதினால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் இதுபூமியில் மோதும் எனின் ஒட்டுமொத்த மனிதகுலமும் அழிவடையாது எனினும், பாரியதோர் அழிவு பூமியில் ஏற்படக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் அச்சம் தரும் கருத்துகளைக் கூறியுள்ளனர்.

எனினும் பூமியில் இந்த விண்கல் மோதுவதற்கு சாத்தியப்பாடுகள் குறைவு என விஞ்ஞானிகள் கூறும் அதே சமயம் மறுபக்கத்தில் அவ்வாறு இது பூமியில் மோதினால் அதனால் ஏற்படும் தூசு சூரியனை மறைத்துவிடும் சாத்தியக்கூறு உள்ளது எனவும், இதனால் 10 வருடங்களுக்கு பூமிக்கு சூரிய ஒளியே கிடைக்காது போய்விடும் எனவும் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்துள்ளது அச்சத்தையே ஏற்படுத்துகின்றது.

பூமியும், விண்வெளியும் நிலையானது அல்ல. அந்தரத்தில் நிலையில்லாமல் பயணித்துக்கொண்டே இருக்கின்றது அப்படி பார்க்கும் போது விண்கற்கள் பூமியில் வந்து மோதும் வாய்ப்புகள் காணப்படவே செய்கின்றது.

என்றாலும் நிலையில்லாமல் பிரபஞ்சத்தில் அனைத்தும் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இப்படி ஒவ்வொன்றும் இடம்மாறி மாறி செல்வதால் பூமியில் விண்கற்கள் மோதுவதற்கான சாத்தியத்தன்மை குறைவு என்ற வாதமும் ஏற்றுக்கொள்ளக்கூடியவிடயமே.

இருந்தாலும் ஏற்கனவே விண்கல் ஒன்று மோதியதால் பூமியில் வாழ்ந்த டைனோசர் இனமே முற்றாக அழிந்து புதிய உலகம் பிறந்துள்ளது என்பதையும் எப்போதும் மறந்துவிடல் ஆகாது. அப்படியான ஆபத்து மீண்டும் ஒருமுறை ஏற்படக்கூடாது என்பதே மனித குலத்தின் எதிர்பார்ப்பு.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg