Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பியோங்யாங் ஒலிம்பிக்கில் பங்கேற்க 400 ரஷ்ய வீரர்கள் தகுதி!

In விளையாட்டு
Updated: 10:03 GMT, Jan 20, 2018 | Published: 10:01 GMT, Jan 20, 2018 |
0 Comments
1096
This post was written by : Elakkiya

பியோங்யாங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் நடுநிலையான கொடியின் கீழ் பங்கேற்பதற்கு சுமார் 400 ரஷ்ய வீரர்கள் தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் சபை அறிவித்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை)  சர்வதேச ஒலிம்பிக் சபை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் “அடுத்த மாதம் பியோங்யாங்கில் ஆரம்பமாகவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு தெரிவு செய்யப்பட்ட 500 ரஷ்ய வீரர்களில் 389 ரஷ்ய வீரர்கள் தகுதிபெற்றுள்ளனர். ஏனைய வீரர்களுக்கு விளையாட்டு சோதனைகளும் சேமிக்கப்பட்ட மாதிரிகளில் ஊக்கமருந்து மீள் பரிசோதனையும் நடத்தப்படும். அவை சரியாக இருந்தால் மாத்திரமே அவர்கள் பங்கேற்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊக்கமருந்து சர்ச்சை காரணமாக பியோங்யாங் ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் சபை கடந்த மாதம் தடை விதித்தது. எனினும் பரிசோதனைகளின் பின்னர் சுத்தமான வீரர்கள் என்று கருதப்படுபவர்கள் நடுநிழல வீரர்களாக போட்டியிட அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பியோங்யாங் ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பித்து 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg