Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொக்லேட் வேண்டாமே! – முகப்பொழிவு இழந்து போகுமாம்

In
Updated: 09:33 GMT, Jan 20, 2018 | Published: 09:33 GMT, Jan 20, 2018 |
0 Comments
1062
This post was written by : Puvanes

சொக்லேட் விரும்பிகள் இல்லை என்றே கூறவேண்டும். பலருக்கு இந்த சொக்லேட் ஒருவித போதை தரும் இனிப்பு என்றும் சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு சொக்லேட் விருப்பமானதொன்று.

பலரகங்களில், பல வண்ணங்கள், பல சுவைகளில் என சொக்லேடுகள் அதிகம். அதே வகையில் இந்த சொக்லேட்டுகளில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு.

பெரும்பாலும் பருக்கள் உள்ளவர்கள் சொக்லேட்டை அதிகமாக உண்ணுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது. என்னதான் முகஅழகிற்காக பாடுபட்டாலும் சொக்லேட்டை அதிகமாக உட்கொள்ளும் போது முகப்பொழிவு பழுதடையக்கூடும் என்பதும் உண்மைதான்.

பொதுவாக முகப்பருக்கள் உள்ளவர்கள் கொழுப்புணவை தவிர்த்துக்கொள்வது அவசியம். கொழுப்பு அதிகரிக்கும் போது உடலினுள் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் துவாரங்கள் மூடிக்கொள்ளும். இதனாலேயே பருக்கள் அதிகம் உள்ளவர்களுக்கு கொழுப்பு உணவுகள் எதிரிகளாக மாறிவிட்டன.

சொக்லேட்டுகளில் அதிகம் கொழுப்பு உள்ளது. இது செறிவற்ற கொழுப்பு வகையில் அடங்குவதால் கொழுப்பு அமிலம் அதிகம் காணப்படுகின்றது. இதனால் பருக்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.

அதேபோன்று மறுபக்கத்தில் சொக்லேட் உண்பதால் பருக்கள் அதிகரிக்காது என்றும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் அளவுக்கு அதிகமாக சொக்லேட் உண்பது பொழிவான முகத்திற்கு கேடு ஏற்படுத்தக்கூடும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg