Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொய் கூறி வசமாக மாட்டிய வளர்மதி

In இந்தியா
Updated: 10:02 GMT, Jan 20, 2018 | Published: 10:02 GMT, Jan 20, 2018 |
0 Comments
1474
This post was written by : Kemasiya

அநாகரிகமான பேச்சுக்களை தான் பேசுவதே இல்லை எனக் கூறிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வளர்மதி, அவர் பேசிய அநாகரிமான வார்த்தைகளை தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் ஆதாரம் காட்டியபோது அது தன்னுடைய குரல் இல்லை என பொய் கூறி பேச்சை மாற்றியுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வளர்மதி மேற்படி மாற்றிபேசியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

“ஜெயலலிதாவின் ரத்தம் குடித்த ஓனாய் கூட்டம் என அவர் கூறியமை சசிகலா குடும்பத்தையா எனத் தொகுப்பாளர் கேட்ட போதே வளர்மதி மேற்படி பேச்சை மாற்றி பேசினார்.

இறுதியில் பதிலே சொல்லாமல் வேறு கேள்வி கேளுங்கள் என கோபத்துடன் கூறியிருந்தார்.

அத்துடன் இந் நிகழ்ச்சியின் போது பேசிய வளர்மதி,

“மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இருந்தால்தான் தமிழ்நாட்டு மக்கள் நலன் பாதுகாக்கப்படும் . மத்திய அரசின் சில கருத்துக்களை எதிர்ப்போம் சில கருத்துக்களை ஆதரிபோம். அ.தி.மு.க.வின் எதிர்காலம் பிரகாசமாகவுள்ளது.

சசிகலா மீது உள்ள மரியாதை அவர் பெண் என்பதால் தானே தவிர, கட்சிக்கு தலைமை ஏற்க அல்ல.” என்றும் வளர்மதி திட்டவட்டமாக கூறியிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg