Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன்றைய கிறிஸ்தவர்களோடு இயேசு கிறிஸ்து இருக்கிறாரா?

In
Published: 09:49 GMT, Jan 20, 2018 |
0 Comments
1349
This post was written by : Puvanes
jesus001

மனிதகுலத்தின் மிகப் பெரிய ஆன்மீக வளர்ச்சிகளில் ஒன்று என விபரிக்கப்படுவது கிறிஸ்த்துவமதம். இத்தகைய மதத்தின் தற்போதைய பாதை இந்தக் கூற்றை வலுப்படுத்துகின்றதா?

பைபிளும், அதன் போதனைகள் கூறியவற்றில் இருந்து பலர் விலகிச்செல்வது கண்கூடாகத் தெரிகின்றது இந்தநிலையிலேயே ஓர் மிகப்பெரிய கேள்வி பிறக்கின்றது. அதாவது “இன்றைய கிறிஸ்தவர்களோடு கிறிஸ்து இருக்கிறாரா?” என்பதே அது.

இதற்கு சட்டென பதில் கிடைக்கும் “அதில் ஏன் சந்தேகம் கண்டிப்பாக இயேசு இருக்கின்றார் என. உண்மைதான் இயேசு இருக்கின்றார். தம்மைப் பின்பற்றுபவர்களோடு ‘உலகத்தின் முடிவுபரியந்தம்’ இருக்கப்போவதாக அவர் வாக்குறுதி அளிக்கவில்லையா?” என்ற பதில் கேள்வியையும் தொடர்ந்து முன்வைக்கப்படும்.

மத்தேயு 28:20 படி இயேசு இதனைக் கூறியுள்ளார் வாக்குறுதியும் அளித்துள்ளார். ஆனால் தம்மை பின்பற்றுவதாகவும், கூறிக்கொண்டு தனது விருப்பப்படி தான்தோன்றித் தனமாக இருப்பவர்களுடன் இருக்கப்போவதாக அவர் வாக்குறுதி அளிக்கவில்லையே….

இயேசுவின் நாளிலிருந்த மதத் தலைவர்கள் சிலர், தாங்கள் எப்படி நடந்துகொண்டாலும் கடவுள் தங்களோடு இருந்ததாக நினைத்தார்கள். இஸ்ரவேலரை ஒரு விசேஷ நோக்கத்திற்காகக் கடவுள் தேர்ந்தெடுத்திருந்ததால், அவர்களை ஒருபோதும் கைவிட மாட்டார் என சில மதத் தலைவர்கள் நம்பினார்கள். (மீகா 3:11)

ஆனால் காலப்போக்கில், கடவுளுடைய சட்டங்களையும் தராதரங்களையும் இஸ்ரவேலர் ஒரேயடியாய் ஒதுக்கித்தள்ளினார்கள். விளைவு? “இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்” என நேரடியாகவே இயேசு கிறிஸ்து அவர்களிடம் சொன்னார். (மத்தேயு 23:38) அந்த மத அமைப்பு முழுவதும் கடவுளுடைய தயவை இழந்துபோனது.

“உலகத்தின் முடிவுபரியந்தம்” தாம் இருக்கப்போவதாய் வாக்குறுதி அளித்த இயேசு, அதற்காக என்ன நிபந்தனைகளை அவர்களுக்கு விதித்துள்ளார்…

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதனால் நீங்கள் என்னுடைய சீடர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.’

‘நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சிஷ்ராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்’

உண்மை கிறிஸ்தவம் விசுவாசத்தைவிட்டு வழிவிலகிப்போகும் என்று அப்போஸ்தலன் பவுல் எச்சரித்திருந்தார். தான் மரித்த பிறகு, கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்களிலிருந்து “கொடிதான ஓநாய்” போன்றவர்கள் எழும்பி, “சீடர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று” அவர் முன்னறிவித்திருந்தார்.

போலி கிறிஸ்தவர்கள் எப்போது கிறிஸ்துவை மறுதலிக்கத் தொடங்கினார்கள்? இயேசு மரித்த பின், வெகு சீக்கிரத்திலேயே மறுதலிக்கத் தொடங்கினார்கள். தமது ஊழியத்தின்போது தாம் விதைத்த உண்மை கிறிஸ்தவர்களாகிய ‘நல்ல விதைகளின்’ நடுவே, கள்ளக் கிறிஸ்தவர்களாகிய “களைகளை” பிசாசாகிய சாத்தான் மளமளவென நடத்தொடங்குவான் என இயேசுதாமே எச்சரித்தார்.

எல்லாம் வல்ல பரமபதாவின் கொள்கைகளில் இருந்து விடுபட்டு நெறிபிறழ்ந்து வாழும் கிறிஸ்தவர்களுடன் தான் இருப்பதாக இயேசு கூறவில்லை என்பதை அறிந்து நடப்போமாக.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg