Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆண்களே வழுக்கை தலைபிடித்து அழ வேண்டாம்! – இதோ தீர்வு

In
Updated: 09:55 GMT, Jan 20, 2018 | Published: 09:55 GMT, Jan 20, 2018 |
0 Comments
1120
This post was written by : Puvanes

ஆண்களின் திருமணத்திற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் சொட்டைத்தலையும் ஒரு பிரதான காரணமாகவே அறியப்படுகின்றது. “அவர் பார்ப்பதற்கு முதியவரைப்போல் அல்லவா இருக்கின்றார், அவர் வேண்டாமே” என்ற வார்த்தைகளை பெண்பார்க்கும் படலத்தில் உள்ள முடியுதிர் தலையை உடைய ஆண்கள் கேட்டிருக்கலாம்.

இந்தப்பிரச்சினை ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் உள்ளது. தலைமுடி உதிர்வுக்கு மரபணுக்களின் செயற்பாடுகள் மட்டும் காரணம் அல்ல தூக்கமின்மை, மனஅழுத்தம், பதற்ற மனநிலை போன்றவையும் ஒருகாரணமாக அமைந்து விடுகின்றது.

முடியுதிர்ந்து முதியவரைப்போல் இருக்கும் ஆண்களே கேலிப்பேச்சுகளையும், தவிர்த்துக் கொண்டு நீங்களும் செழிப்பான தலைமுடியைப்பெற்றுக் கொள்ள சில வழிமுறைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

கடுகு எண்ணெய் கொண்டு தலையை மசாஜ் செய்து கொள்வது முடியுதிர்வை தடுக்கும். கடுகு எண்ணெய் மற்றும் மருதாணி இலைகள் சிறிதளவு சேர்த்து கொதிக்கவைத்து பின்னர் அதனை ஆறவைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதனை தலையில் தொடர்ந்து தடவிவர முடியுதிர்வு தடுக்கப்பட்டு முடி வளர்ச்சி வளர்ச்சியடையும்.

அதேபோன்று வெங்காயம் கூட முடிவளர்ச்சியை அதிகரிக்கும். முடியுதிர்ந்த பகுதியில் வெங்காயத்தை நன்றாக அரைத்து அடிக்கடி தடவிவர முடி வளர்ச்சி அதிகரிக்கும். கண் எரிவு என்று தவிர்க்க வேண்டாம் இது தன்மானப்பிரச்சினை ஆண்களே.

நெல்லிக்காயினை துண்டுகளாக நறுக்கி தேங்காய் எண்ணையுடன் சேர்த்து அதனை தலையில் தடவிவர முடி வளர்ச்சி அதிகரிக்கும். அதேபோன்று நெல்லிச் சாறோடு, எலுமிச்சை சாறினையும் சேர்த்து அதனை தலையில் தடவிவருவதும் முடிவளர்ச்சியை அதிகரிக்கும்.

முட்டையின் மஞ்சள் கருவும் கூட முடிவளர்ச்சியை அதிகரிக்க சிறப்பான பங்களிப்பைச் செய்கின்றது. மஞ்சள் கருவுடன் சிறிதளவு தேன்சேர்த்து தலையில் தடவி 30 தொடக்கம் 45 நிமிடங்களின் பின்னர் குளித்துவந்தால் முடிவளர்ச்சியை கண்கூடாகக் காணலாம்.

ஆண்களே எப்படியோ வழுக்கை தலையை செழிப்பான தலையாக மாற்றி உங்கள் திருமணக் கனவை சாத்தியமாக்கிக்கொள்ள முயற்சி செய்யுங்களேன்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg