Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தற்கொலை தொடர்பில் சிந்தித்தேன்: மைக்கேல் பெல்ப்ஸ்

In விளையாட்டு
Updated: 10:33 GMT, Jan 20, 2018 | Published: 10:32 GMT, Jan 20, 2018 |
0 Comments
1180
This post was written by : Elakkiya

கடந்த 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் வெற்றியின் பின்னர் வாழ்வில் தான் எதிர்கொண்ட கடுமையான கவலைகளும் மன அழுத்தங்களும், தற்கொலைக்கு தூண்டியதாக அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தெரிவித்துள்ளார்.

சிக்காகோவில் நடைபெற்ற மன ஆரோக்கியம் தொடர்பான மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சாதனை வீரரான மைக்கல் பெல்ப்ஸ், நீச்சல் உலகில் தனது நீண்டகால போராட்டங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.

இதன்போது, ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளின் பின்னரும் தான் பெரிதும் மனச்சோர்வடைவதாக தெரிவித்த பெல்ப்ஸ், குறிப்பாக 2012 ஒலிம்பிக் போட்டியில் 4 தங்கப்பதக்கங்களும் 2 வெள்ளிப்பதக்கங்களும் வென்ற பின்னர் நான்கு நாட்கள் உணவு தூக்கம் இன்றி தனது அறையில் உள்ளேயே இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய நேரங்களில் மேலும் விளையாட கூடாது என்றும் உயிருடன் இருக்க தேவையில்லை என்பது போன்ற மனநிலை தோன்றியதாகவும் மனஅழுத்தம் அதிகரிக்கும் போது தற்கொலை எண்ணங்கள் தோன்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 17 ஆண்டுகள் மன அழுத்தமும், கவலைகளும், சிக்கல்களும் அவரது வாழ்க்கையில் பிரதான பங்கு வகித்தன என்றும் அவற்றிலிருந்து விடுபட போதை மருந்து, மற்றும் மது பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தகைய மன அழுத்தத்துடன் கூடிய களங்கத்தை அகற்ற விரும்புவதாகவும் பெல்ப்ஸ் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg