Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அந்தகாலத்தில் பெண்கள் தங்கள் மேனியை பளபளப்பாக்கியது எவ்வாறு? – ராணிகளின் ரகசியம்

In
Updated: 10:11 GMT, Jan 20, 2018 | Published: 10:11 GMT, Jan 20, 2018 |
0 Comments
1197
This post was written by : Puvanes

இப்போது தான் பெண்கள் அழகுசாதனங்களையும், அழகு நிலையங்களையும் நாடிச் சென்று தங்கள் அழகை மேலும் அதிகரித்துக் கொள்கின்றார்கள் ஆனால் பண்டைய காலத்தில் அதாவது ராணிகளும், இளவரசிகளும் அவர்கள் தோழிகளும் தங்கள் அழகை எவ்வாறு அதிகரித்துக்கொண்டார்கள்?

கேள்வி என்னமோ நியாயமானதுதான் செயற்கை பூச்சிகளும், அழகுசாதனங்களும் விதவிதவிதமான கிறீம்களும், ஒப்பனை முறைகளும் அப்போது இல்லை. ஆனாலும் அந்தகாலப் பெண்கள் எப்படி அழகிற் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள்?

இதற்கு சட்டென “நீங்கள் எப்போது அந்கால பெண்களை நேரில் பார்த்தீர்கள்” எனக் கேட்டுவிட வேண்டாம். கொஞ்சமாக மன்னர்காலத்திற்கு சென்று அப்போது வாழ்ந்த பெண்களின் அழகிற்காக அவர்கள் கையாண்ட முறைகளைப் பார்க்கலாம்.

அந்தகாலத்தில் வாழ்ந்த பெண்கள் ரோஜா மலர்கள் ஊறிய நீரில் தான் அதிகமாக குளிப்பார்களாம் இதனால் அவர்கள் மேனி பளப்பனப்பாக மாறியுள்ளது.

பொதுவாகவே இலக்கியங்களிலும், புராணங்களிலும் வர்ணிக்கப்படும் பெண்களின் முகத்தில் பிரகாசம், ஓர் ஒளி தெரியும் எனக் கூறப்படும் இதற்கு காரணம் அப்போதைய பெண்கள் (ராணிகள்) தேனுடன் சைத்தூன் (ஒலிவ் எண்ணெய் – olive oil)கலந்து முகத்தில் பூசி வருவார்களாம் இதனாலேயே அவர்கள் முகம் பளபளப்பாக காணப்பட்டுள்ளதாம்.

கழுதைப்பால் இளமையை நீடிக்க உதவியதாம். அதனால் அப்போது தொடர்ச்சியாக ராணிகள் கழுதைப்பாலில் குளிப்பது, தேனுடன் கலந்து முகத்தில் பூசி வருவது போன்றவற்றைச் செய்துள்ளார்கள் இதனாலேயே நீடித்த இளமை அவர்களுக்கு கிடைத்ததாம்.

இப்போது மட்டுமல்ல ஆதிகாலத்திலும் குங்குமப்பூ விலை உயர்ந்த ஒன்றாகவே காணப்பட்டுள்ளது. அரச குலம், பிரபுக்கள் வீட்டுப்பெண்கள் போன்றோர் இதனை பயன்படுத்தி தமது அழகை மேலும் மெருகூட்டிக்கொண்டுள்ளார்கள்.

மஞ்சள் பூசி குளிப்பது அந்தகாலத்தில் பெண்களிடம் காணப்பட்ட அநேகமான வழக்கம் இதனாலும் அவர்கள் பொழிவுடன் இருந்துள்ளார்கள். சந்தனத்தை அரைத்து மேனியில் தடவிக்கொள்ளுதல், போன்ற முறைகளை அக்கால பெண்கள் கடைபிடித்ததால் மேனிப் பளபளப்பினை பெற்றுக்கொண்டார்களாம்.

நெல்லிச்சாற்றையும் கூட அந்தகாலத்தில் பெண்கள் அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளனர் இதனாலேயே அவர்கள் தனித்துவ அழகைப்பெற்றுக்கொண்டுள்ளார்களாம். இதனாலோ என்னவோ அப்போது முதல் இப்போது வரை நெல்லி முக்கியக் கனியாகக் காணப்பட்டு வருகின்றது.

இயற்கையுடன் ஒன்றி வாழும்போது அதுவே வாழ்வை வழப்படுத்தும் என்பது இதனூடாக தெளிபடுகின்றது. எப்படியோ நாகரீக அழகை தேடிச் சென்று பெண்கள் அபாயத்தை வாங்கிக்கொள்ளாமல் இருந்தால் நல்லதுதான்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg