Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நினைத்தால் இயங்கும் ஸ்மார்ட்போன்- தொழில்நுட்பத்தில் ஓர் புரட்சி

In
Updated: 11:02 GMT, Jan 20, 2018 | Published: 10:28 GMT, Jan 20, 2018 |
0 Comments
1207
This post was written by : Puvanes

ஆரம்பத்தில் செங்கற்களைப்போன்று வெளியான அலைபேசிகள், அடுத்து சிறிதாகவும் அதற்கடுத்து வண்ணத் திரை கொண்டதாகவும் அதன்பின்னர் தொடுதிரை கொண்டவை என்ற வகையிலும் நாளுக்கு நாள் புதிய வளர்ச்சியை அடைந்து வந்துள்ளது.

இப்போதைக்கு கையடக்கத்தில் உலகை சிறிதாக்கிவிடும் அளவு அலைபேசிகள் ஸ்மார்ட்போன்களாக வளர்ந்துவிட்டது. அதனையும் தாண்டி அடுத்து எப்படியான ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது பலரது ஆவல்.

அந்தவகையில் கூடிய விரைவில் நினைப்பவற்றை செயற்படுத்தக்கூடிய வகையில் ஸ்மார்ட்போன்கள் வளர்ச்சியடையவுள்ளன. இது எவ்வாறு என்ற கேள்வி எழுவது புரிகின்றது.

அதாவது ஒருவர் தனது ஸ்மார்ட்போனினை கைகளினால் இயக்கத்தேவையில்லை மாறாக நினைத்தாலேபோதும். ஒருவருக்கு அழைப்பை ஏற்படுத்தவேண்டும் என்றால் அதனை நினைத்தாலே அழைப்பு தானாக சென்றுவிடும் அதி நவீன திறன் கொண்ட ஸ்மார்ட் போன்கள் வடிவமைக்கப்படவுள்ளன.

உதாரணமாக பேஸ்புக்கில் ஒரு பதிவுக்கு லைக் செய்யவேண்டும் என்றால் அதனை மனதில் நினைத்தால் தானாகவே லைக் செய்யும் அளவு நுட்பமான ஸ்மார்ட் போன்கள் வெளிவரவுள்ளன.

இந்த திட்டத்தினை முன்னணி நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. மூளைமின்னலை வரவு (electroencephalogramme) எனப்படும் தொழில் நுட்பம் ஊடாக ஒருவரது மூளை பதிவு செய்யப்படும்.

அதன்பின்னர் என்ன நினைக்கின்றோம் என்பதனை ஒருகருவி மூலம் பதிவு செய்யப்பட்டு அது அப்படியே செயற்படுத்தப்படும். இந்த தொழில் நுட்பம் எதிர்கால உலகை ஆட்டிப்படைக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.

எனினும் இந்த வகை ஸ்மார்ட்போன்களை பாவிக்க பாவனையாளர்களுக்கு பயிற்சி தேவை எனவும், அந்தப்பயிற்சியைப் பெற கருவி ஒன்றினையும் மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட திட்டமிட்டுள்ளது.

அந்தக்கருவி முதலில் நாம் எப்படி எல்லாம் சிந்திப்போம் என்று பதிவு செய்துகொண்டு அதன்பின்னர் எண்ணத்திற்கு ஏற்ப செயற்பட ஆரம்பிக்கும் எனவும் குறித்த நிறுவனம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg