Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நான்கு நாடுகள் பங்கேற்கும் ஹொக்கி தொடர்- இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி

In விளையாட்டு
Updated: 10:55 GMT, Jan 20, 2018 | Published: 10:55 GMT, Jan 20, 2018 |
0 Comments
1129
This post was written by : Elakkiya

நியூஸிலாந்தில் நடைபெற்றுவரும் நான்கு நாடுகள் பங்கேற்கும் ஹொக்கி போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து, ஜப்பான், பெல்ஜியம் ஆகிய நான்கு அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் இத் தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்கொண்ட இந்தியா 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த போட்டியை சமநிலைப்படுத்தினாலே இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும் என்ற நிலையில் களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் கனவை தகர்த்து இறுதிப் போட்டி வாய்ப்பை இந்திய அணி பெற்றுக் கொண்டுள்ளது.

அதேவேளை இன்று நடைபெற்ற மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் ஜப்பானை எதிர்கொண்ட பெல்ஜியம் 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதன்படி நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பெல்ஜிய அணிகள் மோதுகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg