Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காட்டுத்தீ அபாயம்: சிட்னி றோயல் பூங்காவிலுள்ளவர்களுக்கு எச்சரிக்கை

In
Updated: 10:46 GMT, Jan 20, 2018 | Published: 10:46 GMT, Jan 20, 2018 |
0 Comments
1259
This post was written by : Suganthini

அவுஸ்ரேலியாவின் சிட்னியில் காட்டுத்தீ மிகத் தீவிரமாகப் பரவும் அபாயம் காணப்படுவதால், றோயல் தேசிய பூங்காவிலுள்ள பார்வையாளர்களுக்கு, இன்று (சனிக்கிழமை) அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிட்னியில் காட்டுத்தீ பரவும் அபாயம் காணப்படுவதால், மேற்படி பூங்காவுக்கு பொதுமக்கள் வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக அறிவுறுத்தி  பொதுமக்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுந்தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காட்டுத்தீ அபாயத்தைத் தொடர்ந்து, பார்வையாளர்களால் நிரம்பிவழிந்த இந்த பூங்கா இன்று நண்பகலுடன் மூடப்பட்டுள்ளது.

கடந்த 79 வருடங்களின் பின்னர் இம்முறை, அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் கடுமையான வெப்பநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, சிட்னியிலுள்ள பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg