Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊவா முதலமைச்சரை உடனடியாக கைது செய்யுங்கள்: அதிபர்கள் தொழிற்சங்கம்

In இலங்கை
Updated: 13:21 GMT, Jan 20, 2018 | Published: 11:28 GMT, Jan 20, 2018 |
0 Comments
1226
This post was written by : Risha
gg

பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றச்சாட்டின் கீழ் ஊவா மாகாண முதலமைச்சர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என அதிபர்கள் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரத்திற்கு கட்டுப்படாத பதுளை பாடசாலை அதிபரை மண்டியிட வைத்தமை குறித்து இன்று (சனிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அதிபர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டிய மாகாண கல்விச் செயலாளரின் பொறுப்பற்ற செயற்பாடு குறித்து அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

அரச சேவையின் உயர் பதவி வகிக்கும் ஜனாதிபதி செயலாளர் இது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி, குறித்த தமிழ் பாடசாலை அதிபருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளர்.

அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்த அதிபரை குறித்த அரசியல்வாதி தன் வீட்டுக்கு அழைத்து தன்முன் பலவந்தமாக மண்டியிட்டு மன்னிப்பு கோரவைத்துள்ளதுடன், அதனை வெளியில் கூற வேண்டாம் என அச்சுறுத்தலும் விடுத்துள்ளார்.

இவ்வாறு உயிருக்கு அஞ்சி வாய்மூடியிருந்த குறித்த அதிபர், இவ்வாறான அரசியல்வாதிகளின் அடாவடித்தனங்களை தட்டிக்கேட்கும் வகையில் முன்வந்து வாக்குமூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg