Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்- ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி

In டெனிஸ்
Updated: 11:36 GMT, Jan 20, 2018 | Published: 11:35 GMT, Jan 20, 2018 |
0 Comments
1141
This post was written by : Elakkiya

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இன்றைய போட்டியில் ஜேர்மனிய வீராங்களை ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்ட ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா அதிர்ச்சித் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

ரொட் லவர் அரீனா அரங்கில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் 6:1, 6:3 என்ற செட் கணக்கில் ஷரபோவாவை தோற்கடித்து ஏஞ்சலிக் கெர்பர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஷரபோவாவை தோற்கடிப்பதற்கு கெர்பருக்கு வெறும் 64 நிமிடங்களே தேவைப்பட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டின் சம்பியனான கெர்பர் ரஷபோவாவை தோற்கடித்ததன் மூலம் அவுஸ்ரேலிய ஓபனின் சிறந்த போட்டியாளர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg