Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொலையில் முடிவடைந்த குடும்ப தகராறு: ஊருபொக்கவில் சம்பவம்

In இலங்கை
Published: 12:11 GMT, Jan 20, 2018 |
0 Comments
1217
This post was written by : Risha

ஊருபொக்க பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்து கழுத்து நெறித்து கொல்லப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குடும்ப தகராறின் காரணமாக குறித்த பெண்ணின் கணவரால் அவர் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மனைவியை கொலை செய்த கணவர், அங்கிருந்த தனது ஏழு வயது மகளையும் அழைத்துக்கொண்டு தெரனபனாதர என்ற பகுதிக்கு சென்று, நண்பரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த நபர் ஊருபொக்க பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதன்படி இன்று அதிகாலை குறித்த வீட்டிற்கு பொலிஸார் சென்ற போது பெண் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின் கணவரை ஊருபொக்க பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg