Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைத்திரியின் அதிரடி தீர்மானம், ஐ.தே.க கழுத்தில் மற்றுமொரு கத்தி

In இலங்கை
Updated: 13:27 GMT, Jan 20, 2018 | Published: 13:27 GMT, Jan 20, 2018 |
0 Comments
1663
This post was written by : Arul Jesu

2018 ஆம் ஆண்டு முதல் நாட்டின் பொருளாதார துறையை தான் பொறுப்பேற்று செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியிடம் நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் வழங்கப்பட்டிருந்த போதிலும் இந்த வருடம் முதல் தேசிய பொருளாதார சபையினூடாக அதனை பொறுப்பேற்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த மூன்று வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைக்கமைய பொருளாதார முகாமைத்துவத்தை கடைபிடிக்க இடளித்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.

ஆனால் தற்போது நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிகாட்டிய ஜனாதிபதி, தேசிய உற்பத்தி, முதலீடு ஆகியவற்றைப் பாதுகாத்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மீது பகிரங்க குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த தீர்மானம் நல்லாட்சி அரசாங்கத்தில் மேலும் பிளவுகளை எடுத்தலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg