Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தவறான தலைமைகளை மக்கள் தெரிவு செய்யக்கூடாது: டக்ளஸ் தேவானந்தா

In இலங்கை
Published: 13:31 GMT, Jan 20, 2018 |
0 Comments
1150
This post was written by : Varothayan
01

கடந்த காலங்களில் யாரை நம்பி நீங்கள் வாக்களித்தீர்களோ அவர்கள் உங்கள் வாக்குகளால் வெற்றிகளை தமதாக்கி தமது சுயநலன்களையும் சுகபோகங்களையும் மட்டுமே அனுபவித்து வருகின்றனர்.

ஆனால் இனிவருங் காலங்களில் இதுபோன்று தவறான தலைமைகளை தெரிவுசெய்யாது கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நாள்தோறும் மக்களுடன் நின்று மக்களுக்காக பணிபுரிவோரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு வவுனியா பேயாடிக் கூழாங்குளம் பகுதிக்கு இன்று (சனிக்கிழமை) விஜயம் மேற்கொண்டுள்ள அவர் அப்பகுதி மக்களுடனான சந்திப்பில் கலந்துரையாடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று இடம்பெற்ற சந்திப்பிலும் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg