Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவராமைக் கொன்றவர்களும் கூட்டமைப்புக்கு உள்ளேயே உள்ளனர்: சிவசக்தி ஆனந்தன்

In இலங்கை
Updated: 14:36 GMT, Jan 20, 2018 | Published: 14:36 GMT, Jan 20, 2018 |
0 Comments
1324
This post was written by : Varothayan

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு காரணமான ஊடகவியலாளர் சிவராமை கொன்றவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே உள்ளனர் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிந்தவுடன் எமது கூட்டமைப்புடன் தாமும் வந்துவிடுவோம் என முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் தன்னிடம் தெரிவித்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியா பாவக்குளத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஆனந்தன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், ஊடகவியலாளர் சிவராமை கொன்றுவிட்டு கூட்டமைப்புக்கள் இருப்பவர்கள் என்ன சொல்கின்றார்கள்? இடைக்கால அறிக்கையை நாம் குழப்பியதாக இருக்கக்கூடாது. அரசாங்கம் தேவைப்பட்டால் குழப்பட்டும் என்கின்றார்கள்.

ஆனால் அரசு இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் மூலம் இடைக்கால அறிக்கைக்கான ஆதரவை பார்க்கின்றனர். கடந்த ஒரு மாதமாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் இரண்டு கோடி அரசிடம் வாங்கியதாக நான் தெரிவித்து வருகின்றேன்.

ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது அதை மறுக்கவில்லை. நான் சவால் விடுகின்றேன். முடிந்தால் ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது இதை மறுக்கட்டும். அடைக்கலநாதனுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி ஆளும் கட்சிக்கு வழங்கப்படுகின்ற பதவி. ஆனால் அவர் இன்று கூறுகின்றார், தாங்கள் அரசாங்க கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை என. அவ்வாறெனில் நீங்கள் இந்த பதவியை இராஜினாமா செய்துவிட்டு வாருங்கள்.

சித்தார்த்தன் வட மாகாண முதலமைச்சரிடம் வட மாகாண சபைத்தேர்தலில் உங்களுடன் இணைந்து செயற்படுவோம் என தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் தான் கூட்டமைப்பு உள்ளது. கூட்டமைப்புக்குள் உள்ள கட்சிகளுக்கு இதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் இறுதி தேர்தல் என தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg