Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிராமத்தையும் சீர்குலைக்கவே தயாராகின்றனர்: மஹிந்த காட்டம்

In இலங்கை
Updated: 04:36 GMT, Jan 21, 2018 | Published: 02:36 GMT, Jan 21, 2018 |
0 Comments
1100
This post was written by : Anojkiyan
President-Mahida-Rajapaksa

நாட்டை சீர்குலைத்தது போல கிராமத்தையும் சீர்குலைக்கவே அரசாங்கம் தயாராகுவதாக, முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹங்குரங்கெத பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஹோமாகமயில் நேற்று முன்தினம் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பொருளாதார அபிவிருத்தி கிராமத்துக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் எனவும் அதற்காக கிராம அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்குமாறும் கோரியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மஹிந்த ராஜபக்ஷ மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து குறிப்பிடுகையில்-

“தற்போதைய ஆட்சியாளர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாட்டை முன்கொண்டு செல்ல முடியவில்லை. இந்த நிலையில் அவர்களுக்கு கிராமத்தையும் வழங்குவதா?

கிராமத்தையும் சீர்குலைக்கவே அரசாங்கம், கிராம அதிகாரத்தை கோருகின்றது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg