Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கதிர்காமத்தில் தொடர்ந்தும் பதற்றம்: பொலிஸார் தடியடி – 50இற்கும் மேற்பட்டோர் பேர் கைது! (5 ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 03:03 GMT, Jan 21, 2018 | Published: 03:03 GMT, Jan 21, 2018 |
0 Comments
1383
This post was written by : Anojkiyan

கதிர்காமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மக்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தினைக் கலைப்பதற்காக தடியடிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலதிக பொலிஸார் குறித்த பிரதேசத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதன்போது 58 பேர் வரை கைதுசெய்யப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கதிர்காமத்தில் மீண்டும் பதற்றம்: அதிரடிப் படையினர் குவிப்பு (4ஆம் இணைப்பு)

கதிர்காமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் கடும் ஆத்திரமடைந்துள்ள பிரதேச மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருதால், அங்கு அதிரடிப் படையினர் பாதுகாப்பில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக கதிர்காமம் பொலிஸ் நிலையம், மருத்துவமனை மற்றும் அரசாங்க கட்டடங்களுக்குஇந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 9.30 மணியளவில் கதிர்காமம் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் கூடிய பிரதேசவாசிகள் எதிர்ப்பில் ஈடுபட்டதையடுத்து பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்து டயர்களை எரித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் எவ்வத அசாம்பாவிதமும் ஏற்படக் கூடாது என்பதற்காக குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கதிர்காமம் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் -CIDயிடம் விசாரணை ஒப்படைப்பு! (3ஆம் இணைப்பு)

கதிர்காமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, கொழும்பிலிருந்து குற்றப்புலனாய்வு பிரிவின் விசேட பிரிவொன்று கதிர்காமம் நோக்கிச் சென்றுள்ளது.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரில் இவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அங்கு சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

கதிர்காமம் துப்பாக்கிச்சூடு: பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு (2ஆம் இணைப்பு)

கதிர்காமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கைதான பொலிஸாரின் விளக்கமறியல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) இரவு 10.30 மணியளவில் கதிர்காம் நகரில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில், ஒருவர் உயிரிழந்ததையடுத்து இச்சம்பத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், அவர் இன்று நீதின்றத்தில் ஆஜர்படுத்த பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு: கதிர்காமத்தில் குழப்பநிலை

கதிர்காமம் நகரில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில், ஒருவர் உயிரிழந்ததையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) இரவு 10.30 மணியளவில் பொலிஸாரின் பணிப்பை மீறி உந்துருளியொன்று பயணித்ததை தொடர்ந்து, பொலிஸாரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, உந்துருளியில் பயணித்தவர் சம்ப இடத்திலேயே உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தைத் தொடர்ந்து நகர் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதோடு சிலர் பொலிஸார் மீது கற்களை கொண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனையடுத்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பொலிஸ் அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதோட, மேலதிக விசாரணைகைளை முன்னெடுத்து வருவதாக  பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg