Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடு தமிழீழத்திற்கு தாரைவார்க்கப்படும்: மஹிந்த ராஜபக்ஷ

In இலங்கை
Updated: 04:02 GMT, Jan 21, 2018 | Published: 03:29 GMT, Jan 21, 2018 |
0 Comments
1137
This post was written by : Anojkiyan

இரண்டாவது தடவையும் மக்கள் ஏமாற்றமடைந்தால் நாடு தமிழ் ஈழத்திற்கு தாரைவார்க்கப்படும் என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டி – கெலிஓய பிரதேசத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“மக்கள் ஒரு தடவை ஏமாற்றமடைந்தாலும், இரண்டாவது தடவை ஏமாற்றமடையமாட்டார்கள். இரண்டாவது தடவையாகவும் ஏமாற்றமடைந்தால் மூன்றாவது தடவைக்கு நாடு எஞ்சாது. தமிழ் ஈழத்திற்கு நாடு தாரைவார்க்கப்பட்டிருக்கும். எனவே மக்கள் தெளிவுபெற வேண்டும்.

அத்துடன், தற்போது ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் வெளிப்படையான பனிப்போரொன்று ஆரம்பமாகியுள்ளது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg